ராஜ்யசபா: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் ராஜ்யசபா இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 6 தமிழக ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து இந்த காலியிடங்களுக்கு வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15ம் தேதியாகும். 17ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். போட்டி இருந்தால் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
இத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டசபைச் செயலாளர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் 15ம் தேதி வரை தினசரி முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் அதிகாரி அல்லது உதவித் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 9ம் தேதி மட்டும் விடுமுறை தினமாகும்.
எம்.எல்.ஏக்கள் பலம்:
மொத்தம் - 235 (ஒரு நியமன உறுப்பினர் உள்பட)
திமுக கூட்டணி - 167
திமுக - 96
காங்கிரஸ் - 35
பாமக - 18
சிபிஎம் - 9
சிபிஐ - 6
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 2
சுயேச்சை - 1
அதிமுக கூட்டணி - 66
அதிமுக - 60
மதிமுக - 6
தேமுதிக - 1
நியமன உறுப்பினர் - 1 (வாக்குரிமை கிடையாது)
சபாநாயகர் - 1
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணிக்கு 4 எம்.பிக்களும், அதிமுக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கும் நிலை உள்ளது. 6வது எம்.பிக்கு போதுமான பலம் இரு கூட்டணிகளுக்கும் கிடையாது. அது 2வது ஓட்டு அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
தமிழக சட்டசபையின் ஒரே சுயேச்சை உறுப்பினர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார். தேமுதிக உறுப்பினரான விஜயகாந்த் யாருக்கும் வாக்காளிக்காமல் நடுநிலை வகிப்பார் எனத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் இன்னும் சீட் உடன்பாடு தெளிவாக முடிவாகவில்லை. பாமக பிரச்சினையை எழுப்பியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 15ம் தேதி வரை திமுகவுக்கு அது அவகாசம் அளித்துள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications