திமுக தேர்தலில் அடிதடி-தேர்தல் அதிகாரி கார் உடைப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக கிளைக் கழகத் தேர்தலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்தக் கலவரத்தில் தேர்தல் அதிகாரியின் கார் உடைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரையன்விளை கிளைக் கழக தேர்தலில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நாகர்கோவில் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் அங்கு வந்தார்.
அப்போது இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாம்பன் விளையை சேர்ந்த சுயம்பு, ஈத்தாமொழியை சேர்ந்த கணேசன், புல்லுவிளையை பாபு, வில்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதில் தேர்தல் அதிகாரியான ராமகிருஷ்ணன் காரும் உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானம் செய்தனர்.
இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை. அதே போல போலீசாரும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications