ஊதிய உயர்வு - பஹ்ரைன் இந்திய தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஊதிய உயர்வு கோரி கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பஹ்ரைன் இந்தியத் தொழிலாளர்கள் 1000 பேர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்களின் ஊதியத்தை உயர்த்த சம்மதம் தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

பஹ்ரைனின் ஹாஜி ஹசன் அல் அலி குழுமத்தில் பணியாற்றி வரும் 1000 இந்தியத் தொழிலாளர்கள், கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சல்மாபாத் என்ற இடத்தில் உள்ள 2 முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்ைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்து வந்தது.

இதுகுறித்து அவர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைக்கு பஹ்ரைன் தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு செய்தது.

பேச்சுவார்த்தையில் தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்தை ரூ. 7000 (70 பஹ்ரைன் தினார்கள்) ஆக உயர்த்த நிர்வாகம் ஒத்துக் கொண்டது. தற்போது அவர்களுக்கு 65 பஹ்ரைன் தினார்கள் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

பிற கோரிக்கைகள் குறித்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என நிர்வாகம் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+