காங். எம்.எல்.ஏ மீது ரூ. 8.25 லட்சம் மோசடிப் புகார்
கோவை: வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.8.25 லட்சம் அளவு பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக ஊட்டி கங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபாலன் மீது புகார் எழுந்துள்ளது.
ஊட்டி எம்.எல்.ஏ.- வாக இருப்பவர் கோபாலன். இவர் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
இவர் மீது காங்கிரஸ் செயலாளர் உமா நடராஜன் மற்றும் 27 பேர் கையழுத்திட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. வித்யா குல்கர்னியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், "அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஊட்டி எம்.எல்.ஏ. கோபாலன் எங்களிடம் ரூ 8 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கிக் கொண்டார்.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இது குறித்து கேட்டால் ஆள் வைத்து மிரட்டுகிறார். எனவே அவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என பயமாக உள்ளது.
எங்களை ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்ட எம்.எல்.ஏ.விடம் இருந்து பணத்தை மீட்டு தருவதோடு எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த புகார் மனு மீது உடனடி விசாரணை நடத்த எஸ்.பி. வித்யா குல்கர்னி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஊட்டி எம்.எல்.ஏ. கோபாலன் மறுத்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications