உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்
வாரணாசி: நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 90வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக வாரணாசி வந்த மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இதற்கும், பட்ஜெட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக கூறுவது தவறு என்றார்.
பின்னர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், நவீன உலகின் சவால்களை சந்தித்து வெற்றி பெறும் திறமையுடன் இளைஞர்களுக்கு கல்வி அறிவு புகட்டி அனுப்பும் சவால் பல்கலைக்கழகங்களுக்கும், கல்வித்துறைக்கும் உள்ளது.
உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது அறிவின் உலகம். மாற்றத்திலும், வளர்ச்சியிலும் அறிவின் பங்கு மிக முக்கியமானது. எனவே நமது இளைஞர்களை அறிவுத்திறன் உடையவர்களாக உருவாக்க வேண்டியது அவசியம்.
சர்வதேச சமுதாயத்தில் நமது நாடு முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டுமானால், வலுவான பொருளாதாரம், வலுவான பாதுகாப்பு, வலுவான அறிவியல், தொழில்நுட்பக் களம் ஆகியவை இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உயர் கல்வி முறையை பலப்படுத்த வேண்டியது அவசியம்.
கடந்த நான்கு ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி 9 சதவீத விகிதத்தில் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு புதிய வாய்ப்புகள், சவால்கள் நமக்கு ஏற்பட்டுள்ளது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் இத்தகையை வளர்ச்சியை நமது நாடு கண்டதில்லை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நமது உயர் கல்வி முறையின் வளர்ச்சிக்கு பசுமைப் புரட்சி, விண்வெளிப் புரட்சி, ஐடி புரட்சி ஆகியவை முக்கிய காரணங்களாகும். இந்த சாதனைகளோடு நின்று விடாமல், வளர்ந்த உலகம் நமக்கு விடுக்கும் சவால்களையும் ஏற்றுக் கொண்டு நாம் இன்னும் உயரத்திற்குப் போக வேண்டியது உள்ளது என்றார் மன்மோகன் சிங்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications