அதிமுகவிலிருந்து வக்கீல் ஜோதி திடீர் விலகல்

அதிமுக வழக்கறிஞராக, ஜெயலலிதாவின் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்தவர் ஜோதி. ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது.
அவர் உள்பட காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்குத்தான் தற்போது தேர்தல் நடக்கிறது. ஆனால் ஜோதிக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை. மாறாக பாலகங்காவுக்கு சீட் கொடுத்தார்.
இதனால் அப்செட் ஆன ஜோதி தற்போது அதிமுகவிலிருந்து விலகி விட்டார். தனது ராஜினாமா கடிதத்ைத ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், தான் இதுவரை பார்த்துக் கொண்டிருந்த அதிமுக மற்றும் ஜெயலலிதா தொடர்பான வழக்குகளின் கோப்புகளையும் அவர் அனுப்பி வைத்து விட்டார்.
ஜோதியின் ராஜினாமாவை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிகிறது. புதிய வக்கீலையும் அவர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜோதியின் ராஜினாமா ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. சமீப காலமாக அவர் ஜெயலலிதாவின் நம்பிக்கை வட்டாரத்தில் இல்லை. இதனால்தான் அவருக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், காவிரி நடுவர் ஆணைய வழக்குகள் தொடர்பாக டெல்லிக்கு அவர் பயணம் மேற்கொண்டதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சிபிசிஐடி தொடர்ந்த வழக்கால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதாக ஜெயலலிதா கருதியதாலும் ஜோதியை புறக்கணிக்க ஆரம்பித்தாராம்.
இப்படி ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டதால் அப்செட் ஆகித்தான் ஜோதி அதிமுகவிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications