தெரு நாய் தொல்லை - ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்கள் பீதி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்கு அருகே திரியும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதால் மாணவ, மாணவியர் பெரும் பீதியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அச்சம்தவித்தான் குளம்.
இங்கு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களை நாய்கள் கடிக்கும் செயலும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.
அங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 10 வயது மாணவன் தன்ராஜ் என்பவனை சமீபத்தில் வெறி நாய் கடித்து குதறியது.
அதே போன்று நரிக்குடி பகுதியில் வெறி நாய் ஒன்று அந்த பகுதியில் 4 ம் வகுப்பு படிக்கும் மாணவி கவிதா என்பவரை கடித்து குதறியது. இதில் அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
நாய்கள் தொல்லையாலும், அடிக்கடி நாய் கடிப்பதாலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கூடங்களுக்குப் போக அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications