Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கிலிட்டால் தற்கொலை செய்வோம்-சரப்ஜித் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

Sarabjit Singh
அமிர்தசரஸ்:பாகிஸ்தானில் மரண தண்டனையை சந்திக்கவுள்ள இந்தியர் சரப்ஜித் சிங் விவகாரம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தூக்கிலிடப்பட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரும் அறிவித்துள்ளனர்.

1990-ம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரப்ஜித்சிங் என்பவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவருக்கு பாகிஸ்தான் கோர்ட்டு தூக்கு தண்டணை விதித்தது.

பாகிஸ்தான் சிறையில் 17 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கணவர் அப்பாவி. அவரது தண்டணையை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என்று சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீத்கவுர், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு கடைசி கருணை மனுவை அனுப்பினார்.

ஆனால் இந்த மனுவை முஷாரப் நிராகரித்து விட்டநிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி சரப்ஜித் சிங் தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரப்ஜித் சிங்கைக் காப்பாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தார் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

ராஜ்யசபாவில் நேற்று காலை காங்கிரஸ் உறுப்பினர் ரஷீத் அல்வி இப்பிரச்னையை எழுப்பினார். சரப்ஜித் சிங் குற்றமற்றவர். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதே பிரச்னையை, பா.ஜ., உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வியும் எழுப்பினார். அவர் பேசுகையில் சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட பிறகும், மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. இதை ஏற்கமுடியாது. உடனடியாக, இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, சரப்ஜித் சிங்கை காப்பாற்ற வேண்டும் என்றார்.

இதற்கு சபை தலைவர் அமீத் அன்சாரி, அனைவருக்குமே கவலையளிக்கக் கூடிய இப்பிரச்னை குறித்து அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், டில்லியில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் பேசுகையில், சரப்ஜித் சிங் விவகாரத்தில், இந்திய மக்களின் உணர்வுகளை, பாகிஸ்தான் அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இது மிகவும் உணர்வு பூர்வமான விஷயம். எனவே சரப்ஜித் சிங்குக்கு கருணை காட்டும்படி, பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும். அவருக்கு சிறிதளவாவது இரக்கம் காட்டி, மரண தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திப் போட வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.

மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இரக்கம் காட்டவேண்டும் என்பதே மத்திய அரசின் நிலை.

சரப்ஜித் சிங்குக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதை, மீடியா மூலமே எனக்கு தெரியும். அதிகார பூர்வமாக, பாகிஸ்தான் அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.' இவ்வாறு அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

இதற்கிடையே சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீத்கவுர் மற்றும் 2 மகள்கள் இது பற்றி பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:

சரப்ஜித்சிங் ஓர் அப்பாவி. தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்று விட்ட அவரை குண்டு வைத்த வழக்கில் கைது செய்து தூக்கு தண்டணை அறிவித்து விட்டனர்.

மத்திய அரசு அவர்களை எப்படியாவது காப்பாற்றி விடும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இதையும் மீறி அவரை தூக்கில் போட்டால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் என்றனர்.

ஏற்கனவே சரப்ஜித்சிங்கின் சகோதரி தஸ்பீர்கவுர் தனது சகோதரனை விடுவிக்க கோரி தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+