தமிழக அரசின் 150 இலவச டிவி பெட்டிகள் தீயில் எரிந்து சாம்பல்
திருவாரூர்: பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. இது சதிச் செயலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம், பரவக்கரை ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 424 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
வரும் சனிக்கிழமை இந்த டிவிகளை அமைச்சர் மதிவாணன் வழங்குவதாக இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து கரும்புகை வெளிவந்தது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் ஜன்னல் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் தீ மளமளவென பரவியது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அறையில் இருந்த டிவிகளில் 150 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டன.
இது சதிச் செயலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேசமயம், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications