தொகுதி சீரமைப்பு: நரேஷ் குப்தா ஆலோசனை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகள் குறித்து நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் இனிமேல் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதையடுத்து புதிய தொகுதிகளின் அடிப்படையில் புதிய வாக்குச் சாவடிகளை அமைப்பது, வாக்காளர் பட்டியலை திருத்துவது உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
நெல்லையில் மூன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார். இதில், நெல்லை கலெக்டர் பிரகாஷ், குமரி கலெக்டர் ஜோதி நிர்மலா, இணை தேர்தல் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் மோகன், நெல்லை ஆர்டிஓ ராஜேந்திரன், தேர்தல் தாசில்தார் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் சேரன்மகாதேவி, சாத்தான்குளம், திருவட்டாறு ஆகிய சட்டசபை தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு புதிதாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை மாற்றி அமைப்பது, புதிய வாக்கு சாவடிகளை உருவாக்குவது, போன்ற ஆலோசனைகளை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மேற்கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications