ரஜினி .. விறுவிறுப்பில் பொள்ளாச்சி!
ஒரு இடத்துக்கு ரஜினி வருகிறார் என்றால் அடுத்த நாளே அந்த இடம் விஐபி அந்தஸ்து பெற்று விடுகிறது. அதனால்தான் ரஜினியின் அனைத்து விசிட்டுகளும் படு ரகசியமாக வைக்கப்படுகின்றன. சென்னைக்கு அருகில் அதிகம் அறியப்படமாலிருந்த புவனகிரி எனும் சின்ன கிராமம் இன்று முக்கிய தலமாக மாறிவிட்டது, ரஜினியின் இரு விசிட்டுகளுக்குப் பிறகுதான்.
இப்போது சூப்பர்ஸ்டாரின் அடுத்த பயணம் பொள்ளாச்சியை நோக்கி. அங்கே அவர் கோயில் எதையும் எழுப்பப் போவதில்லை. தனது அடுத்த படமான குசேலனின் முக்கியக் காட்சிகளை படமாக்க வருகிறார்.
ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 15 நாட்கள் ரஜினியும் அவரது குழுவிரும் இங்குதான் தங்கப் போகிறார்கள். இதற்காக பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள வேட்டைக்காரன் புதூர், கிணத்துக்கடவு, புரவிபாளையம், ஆனைமலை பகுதிகளில் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்துள்ளார் வாசு.
ரஜினி தங்க ஒரு தனி வீட்டையும் ஏற்பாடு செய்துள்ளாராம். அந்த வீட்டுக்கு இப்போது ஏக மவுசாகி விட்டது. அந்த வீட்டைப் பார்க்க இப்போதே கூட்டம் கூட ஆரம்பித்து விட்டதாம்.
இதுதானுங்க, ரஜினி தங்கப் போற வீடு என்று கூறி, பார்வையாளர்களை ஒழுங்குபடுத்தி பார்க்க விடுகிறார்களாம் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள்.
அப்ப, பொள்ளாச்சியில், இன்னும் 15 நாட்களுக்கு ரஜினி ஆட்சிதான்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்













Click it and Unblock the Notifications