சிவகங்கை, பெரம்பலூரில் மருத்துவ கல்லூரிகள்
சென்னை: சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்படவுள்ளன.
மேலும் தற்போதுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்த 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலூர் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் (நர்சிங் காலேஜ்) அமைக்கப்படவுள்ளன.
தமிழகத்தி்ல் ரூ.221 கோடி செலவில் 227 அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். 10 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.10 கோடி செலவில் ஸ்கேனிங் வசதி செய்து தரப்படும்.
சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். (மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி ஆவண செய்து இந்த மருத்துவக் கல்லூரியை அங்கு அமைக்க உத்தரவிட்டதாகத் தெரிகிறது)
மாநகராட்சியாகும் வேலூர்:
வரலாற்று சிறப்புமிக்கதும், பல முக்கிய கல்வி நிலையங்கள் அமைய பெற்றதுமாகிய வேலூர் நகராட்சிவரும் நிதியாண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்.
கேபிள் டிவி தொழிலாளர்களுக்கு நல வாரியம்:
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விரைவில் செயல்படத் தொடங்கும். கேபிள் டி.வி. மீதான கேளிக்கை வரி ரத்து செய்யப்படுகிறது. கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும்.
டிவி கலைஞர்கள் நல நிதியம்:
அதே போல சின்னத்திரை கலைஞர்கள் நல நிதியம் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
தாலிக்கு வரி விலக்கு:
தங்கத்திலான தாலிக்கு 8 கிராம் எடை வரை வரிவிலக்கு தற்போது உள்ளது. இதற்கும், இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதத்தினர் மங்கல நாணாக பயன்படுத்தும் கருகமணி, சிலுவை போன்றவற்றிற்கும், தற்பொழுது நடைமுறையிலுள்ள 8 கிராம் எடை வரை என்ற நிபந்தனையை நீக்கி இவற்றிற்கு எடை வரம்பின்றி வரி விலக்கு அளிக்கப்படும்.
ரொட்டிக்கு தற்போதுள்ள வரிவிலக்கு போன்றே, பன் மற்றும் ரஸ்க் ஆகியவற்றுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும்.
அனைத்து சித்த மருந்துகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும். அதே போல மஞ்சள்பொடி, மிளகாய்ப் பொடி மற்றும் தனியாப் பொடி ஆகியவற்றுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும்.
உடற்பயிற்சி நிலையம்:
இளைஞர்களின் உடல் நலம் பேணும் வகையில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கான கட்டடங்கள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு, உடற்பயிற்சி கருவிகள் அரசால் வழங்கப்படும்.
இலவச ஆம்புலன்ஸ் சேவை:
அவசர சிகிச்சை தேவைப்படும் தருணங்களில் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு செல்லும் வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் உள்ளோரும் ஒரே தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாகப் பெறுவதற்கான ஒரு புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கும்.
கணினிமயமாக்கப்பட்ட மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் இடம் அறியும் கருவிகள் (GPS) பொருத்தப்பட்ட மருத்துவ ஊர்திகளோடு இந்த சேவை தொடங்கப்படும்.
எஸ்ட்சால் அநாதரவான குழந்தைகள்:
எய்ட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் எவ்வித ஆதரவுமின்றி அல்லலுறும் நிலையைப் போக்கிட அவர்களுக்காக அரசு சார்ந்த அறக்கட்டளை நிறுவப்படும்.
இந்த நோயினால் தந்தை அல்லது தாய் அல்லது பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு, படிப்பு மற்றும் மருத்துவ உதவித்தொகையாக இவ்வறக்கட்டளை மூலம், இக்குழந்தைகளை வளர்க்கும் தொண்டு நிறுவனங்கள் அல்லது குழந்தைகளின் உறவினர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்படும்.
அரவாணிகளுக்கு...
அரவாணிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளித்து, அவர்கள் தனியாகவோ அல்லது சுய உதவிக் குழுக்களாகவோ தொழில் புரிய ஆவன செய்யப்படும்.
இளம் வயதில் அரவாணிகளாகத் தங்களை உணர்வோருக்கு தங்கும் விடுதி ஒன்று தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட அரசு நிதியுதவி அளிக்கும்.
அரியலூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், திருச்சி, மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கூடுதல் கட்டிடமும் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கறம்பக்குடியையும், பொன்னமராவதியையும் தலைமையிடங்களாகக் கொண்டு இரு புதிய வருவாய் வட்டங்கள் அமைக்கப்படும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரத்திற்கு அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த 12 வருவாய் கிராமங்கள் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications