காதலியின் மகளை கொன்று இளைஞர் தற்கொலை
சென்னை: வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தனது காதலி, இந்தியாவுக்குத் திரும்பி வந்து தன்னுடன் வாழ மறுத்ததால், காதலியின் 7 வயது மகளை தண்ணீர் வாளியி்ல் மூழ்கடித்து கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (38). தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கும், சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் அம்மு என்கிற சுதாவுக்கும் (35) காதல் ஏற்பட்டது.
சுதா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி (8), இளவரசி (7) என இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சுதாவுக்கு செளதியில் வீட்டு வேலை கிடைத்தது. இதையடுத்து ரெட்டேரியில் வசிக்கும் தனது சகோதரி கெளரியிடம், தனது இரு மகள்களையும் விட்டு விட்டு போய் விட்டார் சுதா.
இதனால் ஏமாற்றமடைந்தார் பன்னீர் செல்வம். செளதி வேலை வேண்டாம். சென்னைக்கே வந்து விடு என்று சுதாவை வற்புறுத்தி வந்தார் பன்னீர் செல்வம். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் சுதா.
இந் நிலையில் அடிக்கடி கெளரியின் வீட்டுக்குச் சென்று சுதாவின் இரு மகள்களையும் பார்க்கும் வழக்கம் கொண்ட பன்னீர் செல்வம். நேற்று முன்தினமும் அவரது வீட்டுக்குச் சென்றார். பின்னர் செல்வகுமாரியையும், இளவரசியையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வந்தார்.
செல்வகுமாரியை வெளியே அனுப்பி விட்டு இளவரசியின் தலையை தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்தார். உடலை, அப்படியே வாளியில் விட்டுவிட்டு வெளியேறினார்.
இந்தக் கொலை தொடர்பாக பன்னீர்செல்வத்தின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அரை பாட்டில் விஷம் இருந்தது. மீதி விஷத்தை பன்னீர்செல்வம் குடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தபடி அவரை தேட ஆரம்பித்தனர்.
இந் நிலையில் குமரன் நகர் பகுதியில் ன்னீர் செல்வம் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications