ஓகேனக்கல்லில் கர்நாடக பாஜக தொடர்ந்து போராட்டம்-பதற்றம்
ஓகேனக்கல்: ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்தும் இந்தப் பகுதியை சொந்தம் கொண்டாடியும் கர்நாடக பாஜகவினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக பாஜக தலைவர் எதியூரப்பா தலைமையிலான பாஜகவினர் இங்கு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து நேற்று கர்நாடக பாஜகவினர் கட்சியின் விவசாய அணித் தலைவர் ஈஸ்வரசந்திர தலைமையில் மீண்டும் ஓகேனக்கல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநில எல்லையான மாறு கொண்டாய் பகுதிக்கு வந்த இவர்கள் பரிசல்கள் மூலம் மணல் திட்டு பகுதிக்கு வந்தனர்.
அப்போது ஒகேனக்கல் நமதே, ஒகேனக்கல்லை மீட்போம் என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் சிறுமலை மற்றும் சினி பால்ஸ், தொங்கு பாலம், பெரிய அருவி ஆகிய பகுதிகளில் அத்துமீறி நுழைய முயன்றனர்.
அவர்களை தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதைடுத்து தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி திரும்பிச் சென்றனர்.
பாஜகவினரின் இந்த தொடர் போராட்டத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பீதியால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இதையடுத்து அங்கு தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண்ணாகரம் துணை எஸ்பி கிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் முகாமிட்டுள்ளனர்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications