மீலாது நபி: கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: மீலாது நபியையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, அன்பு, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட அனைவரும் இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி:
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தனது வாழ்க்கையையே வழிகாட்டும் நெறியாகக் கொண்டு வாழ்ந்த நபிகள், கடைப்பிடித்த மனித நேயத்தைப் பின்பற்றி, அவர் போல ஏழை, எளியோர், விதவை மகளிர், ஒடுக்கப்பட்டோர் உயர்ந்திட உழைத்திடுவோம்.
பொய்மை களைவோம், வாய்மையுடனும், நேர்மையுடனும் வாக்குறுதிகள் காப்போம் என இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், பிளவுபட்டு நிற்கும் இந்த பூமியில் அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், அண்ணல் நபிகளின் போதனைள் பெரிதும் பயன்படும்.
தரணி தழைக்க வந்த தன்னிகரற்ற நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில், தமிழகத்து இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு எனது மீலாது நபி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மீலாது நபி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications