சிவாஜி ஜெயந்தி: பீதியில் வட இந்தியர்கள்!
மும்பை: மராத்திய மன்னன் வீர சிவாஜியின் பிறந்தநாளை நாளை அதி விமரிசையாகக் கொண்டாடுவதற்கு ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமயத்தின்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பீதி வட இந்தியர்களிடையே நிலவுகிறது.
எப்போதும் இல்லாத அளவுக்கு வெகு விமரிசையாக சிவாஜி பிறந்த நாளை இந்த முறை கொண்டாட ராஜ்தாக்கரேவின் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. சிவசேனை கட்சியினருக்கு தங்களது பலத்தைக் காட்டும் முகமாகவும், வட இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் சிவாஜி ஜெயந்தியை பயன்படுத்திக் கொள்ள ராஜ்தாக்கரே முயல்வதாக கருதப்படுகிறது.
சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டம் தொடர்பாக ராஜ் தாக்கரே கட்சியின் நிர்வாகி சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், மராட்டிய மன்னர் சிவாஜி பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. எங்களது கட்சி சார்பில் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இருந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சேனைத் தொண்டர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.
வெளிமாநிலத்தவர்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறவேண்டும் என்று ராஜ் தாக்கரே கடந்த மாதம் பகிரங்கமாக அறிவித்தபோது பெரும் கலவரம் மூண்டது. இதையடுத்து பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவதற்கும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பதற்கும் ராஜ் தாக்கரேக்கு மும்பை போலீசார் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் தங்கள் அமைப்பின் பலத்தைக் காட்டுவதற்கு இந்த விழாவை ராஜ் தாக்கரே பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
ராஜ் தாக்கரே கட்சியினர் சிவாஜி பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தில் மும்பையில் வாழும் வட இந்தியர்கள் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications