நான் விஜய்காந்துடன் அரசியலே பேசலீங்க.. அருண்குமார்

ஆந்திராவைச் சேர்ந்தவரான அருண்குமார் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரானது முதல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தலைவரான கருணாநிதியை சந்திக்கவில்லை. மாறாக தேமுதிக தலைவர் விஜய்காந்தை விமான நிலையத்தில் சந்தித்தார்.
மேலும் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் அதை காலம் வரும்போது சொல்வதாகவும் குண்டு போட்டார். இதையடுத்து திமுக-காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லிக்கு அழைக்கப்பட்ட அருண்குமாருக்கு சோனியாவிடம் டோஸ் கிடைத்தது. இதையடுத்து கூட்டணி குறித்தெல்லாம் காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். நான் விஜய்காந்துடன் அரசியல் பேசவில்லை என பல்டியடித்தார்.
இதன் பிறகு கருணாநிதியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு அலைந்து கொண்டுள்ள இவருக்கு இதுவரை அதற்கான வாய்ப்பு தரப்படவே இல்லை.
இந் நிலையில் தமிழகம் பக்கம் வருவதையே குறைத்துக் கொண்டுவிட்ட அருண்குமார் டெல்லியில் தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்றும் அவர் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையி்ல்,
திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக உள்ளது. இதனால் கூட்டணியை மாற்ற வேண்டிய அவசியமே இப்போது இல்லை.
நான் விமானத்தில் பறந்தபோது விஜய்காந்தை சந்தித்தது மட்டும் தான் உண்மை. மற்றபடி நாங்கள் அரசியல் பேசவே இல்லை. இது தொடர்பான செய்திகள் அடிப்படையே இல்லாதவை. காங்கிரஸ் தலைமையும் விஜய்காந்துடன் பேசவில்லை.
நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. கூட்டணி தர்மத்தை மீறியதாக எங்களை திமுகவும் புகார் கூறவில்லை என்றார் அருண்குமார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications