நிவாரண உதவி விழாவில் அமைச்சர் பொன்முடிக்கு நெஞ்சுவலி
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் நடந்த நிவாரண உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், மழையில், மின்சாரம் தாக்கி பலியான பழனி என்பவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பொன்முடி கலந்து கொண்டு பழனியின் குடும்பத்தினருக்கு ரூ. 1லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. வலி பொறுக்க முடியாமல் காரில் போய் அமர்ந்தார்.
உடனடியாக அவரை மரகதம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் வேறு ஒரு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமியும், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் விழுப்புரம் விரைந்து பொன்முடியைப் பார்த்து நலம் விசாரித்தனர்.
பிறகு பொன்முடி சென்னை கொண்டு வரப்பட்டார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications