நாய்க் கடி சிகிச்சைக்கு ரேஷன் கார்ட் அவசியம்-அரசு
சேலம்: அரசு மருத்துவமனைகளில் நாய்க் கடிக்கு ஊசி போட வரும் நோயாளிகள் ரேஷன் அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாய்க் கடி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக ஊசி போடப்படுகிறது. நாய்க் கடி மருந்துக்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை செலவிடுகிறது.
நாய்க் கடி மருந்தின் விலை அதிகம் என்பதால் ஏழைகளால் சிகிச்சை பெற முடியாது. இதனால் இந்த மருந்தை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த வாய்ப்பை வசதியானவர்களும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந் நிலையில் சேலம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாய்க்கடி மருந்து ஒன்றின் விலை ரூ.400. ஏழைகள் நலன் கருதி அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த மருந்து வழங்கப்படுகிறது.
வசதி படைத்தவர்களும் இங்கு வந்து இந்த ஊசியை போட்டுக் கொள்கின்றனர். இதை கட்டுப்படுத்தவே பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது ரேஷன் அட்டை, உள்ளிட்ட சான்றுகள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக எந்த கெடுபிடியும் செய்யப்படுவதில்லை என்றார்.
நாயிடம் கடிபட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு விரையும்போது ரேஷன் கார்டையா எடுத்துக் கொண்டு வர முடியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications