தலித் இட ஒதுக்கீட்டில் கை வைக்க முயற்சி-மீராவின் 'உஷார்' நடவடிக்கையால் தவிர்ப்பு

மத்திய பணியாளர் நலத்துறை உருவாக்கியுள்ள புதிய மசோதாவின் வரைவு திட்டத்தை அமைச்சர்கள் குழு சில நாட்களுக்கு முன் இறுதி செய்தது.
அப்போது அந்த மசோதாவில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான காலியிடங்களை, பிற சமூகத்தினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்று கூறப்பட்டிருந்ததோடு,
அதே நேரத்தில், இந்தப் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கும்பட்சத்தில், அதில் ஒரு பகுதியை மற்ற பிரிவினரை கொண்டு நிரப்பலாம் என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த விதிமுறையை மத்திய அரசில் உள்ள சில சக்திகளும் சில அதிகாரிகளும் இடையில் சொருகிவிட்டிருந்தனர்.
மசோதாவை மிக உன்னிப்பாக படித்தபோது இது சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமாரின் கண்ணில் பட்டது. இதனால் டென்சனான மீரா குமார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கோட்டாவை அபகரிக்கும் முயற்சி இது என்று குரல் உயர்த்திய மீரா, இந்த மசோதா நிறைவேறினால் அது மத்திய அரசுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
மீரா குமாரின் இந்த கருத்தை மூத்த அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வானும் ஆமோதிக்கவே, இந்த விதிமுறையை நீக்க, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு ஒப்புக் கொண்டது.
ஏற்கனவே பல்வேறு அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோட்டாவை நிரப்பாமல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசுப் பணியில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கோட்டா இடங்கள் காலியாக உள்ளன.
தகுதியான தலித் கேண்டிடேட் கிடைக்கவில்லை என்று இதற்கு சாக்குபோக்கு கூறி வருகின்றனர்.
இந் நிலையில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் கோட்டாவிலேயே மறைமுகமாக கை வைக்க (தகுதியான தலித் பணியாளர் கிடைக்காவிட்டால் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்கலாம் என்ற விதியை புகுத்தி) முயன்றுள்ளனர்.
இந்த ஆபத்தைத் தான் மீரா குமார் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து தவிர்த்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications