செல்போன்: 2வது இடம் நோக்கி முன்னேறும் இந்தியா
டெல்லி: எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை ஏதாவது சில விஷயத்தில் முந்தி செல்கின்றன உலக நாடுகள். அந்த வகையில் செல்போன் பயன்பாட்டில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு முன்னேற உள்ளது இந்தியா.
உலகில் அதிகளவில் செல்போன் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 3வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலைப்படி அதிகபட்சமாக 54 கோடி வாடிக்கையாளர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
26 கோடி வாடிக்கையாளர்களுடன் அமெரிக்கா 2வது இடத்திலும், 25 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.
ஆனால் இன்னும் ஒரே மாதத்தில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா 2வது இடத்தைப் பிடிக்கும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
மாதத்துக்கு அமெரிக்காவில் 20 முதல் 30 லட்சம் இணைப்புகளும், சீனாவில் 60 முதல் 70 லட்சம் இணைப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அதிகபட்சமாக 80 முதல் 90 லட்சம் இணைப்புகள் பெறப்படுகின்றன.
ஏப்ரல் மாத இறுதியில் செல்போன் மற்றும் தரைவழி இணைப்புகள் 30 கோடி வாடிக்கையாளர்களை அடைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொலைபேசி இணைப்புகள் 29 கோடி பேரை அடைந்துள்ளன என்கிறது டிராய்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications