நிவாரண உதவியில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்- பாமக
தூத்துக்குடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரண உதவி பெறுவதில் இடைத் தரகர்கள் குறுக்கீடு உள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தின் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தமிழக சட்டமன்றம் 2 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பு தருவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 50,000 ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்ட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் முறையாக அவர்கள் ஆய்வு செய்யாமல் கடமைக்கு என்று ஆய்வு செய்கின்றனர்.
விளை நிலங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் முறையாக போய்ச் சேரவில்லை.
நிவாரண உதவி பெறுவதில் இடைத்தரகர்கள் குறுக்கீடு உள்ளது. அவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தவிர்க்க வேண்டும்.
நாங்கள் பார்வையிட்ட பகுதிகளின் நிலை குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவிப்போம் என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications