தமிழகத்தில் மின்வெட்டால் ஜவுளி உற்பத்தி பாதிப்பு-இளங்கோவன்
மதுரை: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு காரணமாக ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரையில் ஜவுளிப் பூங்கா அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதை அமைக்க மத்திய அரசு ரூ. 30 முதல் 60 கோடி வரை மானியமாக தரும்.
நாட்டில் பஞ்சு உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்தாலும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் பஞ்சுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறுகின்றனர். இதனால் பஞ்சு ஏற்றுமதியில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி பாதிப்புக்கு முக்கிய காரணம் மின் வெட்டுதான். இக்குறைகளை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் உள்ள பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துவதை நான் தவறாக கருதவில்லை. தொழிலாளர் பிரச்னைக்காக திமுகவின் தொழிற்சங்கமே சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றாவது அணி அமைத்தால் வரும் தேர்தலில் அவர்களுக்கு பெரும் தோல்வியே கிடைக்கும். அது மட்டுமல்ல இந்த மூன்றாவது அணி, மூன்றாவது இடத்திற்குக் கூட வர முடியாது என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications