வீட்டில் தனியே இருந்த பெண்ணுக்கு கத்திக் குத்து- தாலி பறிக்க முயன்ற கொள்ளையன் வெறிச் செயல்
சென்னை: சென்னையில் வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தாலியைப் பறிக்க முயன்ற திருடன் அந்தப் பெண்ணை வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டான்.
வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகரைச் சேர்ந்த வேதகிரி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (48) பொதுப் பணித்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகன் தியாகராஜன் கால்சென்டரில் பணியாற்றி வருகிறார். நேற்று வேதகிரி பெங்களூர் சென்றுவிட்டார். தியாகராஜன் இரவுப் பணிக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் கலைச்செல்வி மட்டும் தனியாக இருந்தார்.
இந் நிலையில் ஒரு நபர் வீட்டுக் கதவை தட்டினான். கலைச்செல்வி கதவைத் திறந்து யார் என்று பார்ப்பதற்குள் அவரை உள்ளே தள்ளிக் கொண்டு அந்த நபர் வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.
பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி கலைசெல்வியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றான். அவர் தடுக்கவே அந்த கொள்ளையன் கலைசெல்வியை வயிற்றில் கத்தியால் குத்தினான். இதில் அவருக்கு 3 இடங்களில் குத்து விழுந்தது.
கலைச்செல்வி உதவி கேட்டு அலறவே சத்தம் கேட்டு அண்டை வீட்டினர் ஓடி வந்தனர். இதையடுத்து அவரை தோள் பகுதியில் மீண்டும் வெட்டிவிட்டு அந்தக் கொள்ளையன் தப்பியோடிவிட்டான்.
படுகாயமடைந்த கலைச்செல்வி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கறுப்பு பேண்ட், கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்த அந்த கொள்ளையனுக்கு 22 வயது தான் இருக்கும் எனத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன் அண்ணாநகர், முகப்பேர், திருமங்கலம் பகுதிகளில் ஒரு சைக்கோ' கொள்ளையன் அலைந்தான். அவன் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தாலியை மட்டும் பறித்துவிட்டு கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி வந்தான். இதுவரை அவனிடம் 3 பேர் பலியாகியுள்ளனர்.
சில காலமாக அவனது தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந் நிலையில் வளசரவாக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இவன் தான் முந்தைய கொலைகளையும் செய்த தாலிக் கொள்ளையனா என்று விசாரணை நடந்து வருகிறது.
இவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications