பென்னாகரம் போலீஸ் துப்பாக்கி கொள்ளை-ஏட்டுகள் கைது
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போலீஸ்காரரின் துப்பாக்கி கொள்ளை போன சம்பவத்தில் 2 ஏட்டுகள் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தைத் தொடர்ந்து பென்னாகரம் காவல் நிலையம் அருகே உள்ளது சார்நிலைக் கருவூலத்திலும் துப்பாக்கி கொள்ளை நடந்துள்ளது.
நேற்று முன்தினம் சார்நிலைக் கருவூலத்தில் இரவுப் பணியில் போலீஸ்காரர் நடராஜன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தனது துப்பாக்கியை வைத்து விட்டு சாப்பிடச் சென்றார். பின்னர் திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது துப்பாக்கியைக் காணாமல் திக்கிட்டார்.
இதையடுத்து பென்னாகரம் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் கொடுத்தார். தகவல் அறிந்ததும் டிஐஜி செண்பகராமன், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர்.
மீண்டும் போலீஸ் துப்பாக்கி கொள்ளை போன சம்பவம் தர்மபுரி காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காணாமல் போன துப்பாக்கியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டுகள் அக்பர்பாஷா, நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்ஐகள் செம்மண்ணன், கிரிஜாராணி ஆகியோரை சஸ்பென்ட் செய்ய பரிந்துரைப்பட்டுள்ளதாக ஐஜி சஞ்சய் அரோரா தெரிவித்தார்.
ஏட்டுகள், கருவூலம் அருகே டீக்கடை நடத்தி வரும் செல்வம் உள்பட 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications