புதுச்சேரியில் திடீர் கலவரம்; கண்ணன் கார் மீது தாக்குதல்-பந்த்
புதுச்சேரி: புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு அக்கட்சியினர் பந்த் நடத்தினர். பந்த்தின்போது கலவரம் வெடித்தது. ஏராளமான பேருந்துகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கண்ணன். இவர் நேற்று பிற்பகல், வில்லியனூர் அருகே ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். போய் விட்டுத் திரும்பும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்ணனின் கார் மீது தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலிலிருந்து கண்ணன் தப்பினார்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து 6 மணி நேர பந்த் நடத்த புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி பந்த்துக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கடைகளை அடைக்க வேண்டும், பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று கூறி கண்ணன் கட்சியினர் வன்முறையில் இறங்கினர்.
திறந்திருந்த கடைகளை அடித்து நொறுக்கி மூடக் கூறினர். பேருந்துகளையும் அவர்கள் விடவில்லை. இந்த திடீர் வன்முறையால் புதுச்சேரி முழுவதும் கலவர சூழ்நிலை காணப்பட்டது. மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
ஒரு அரசியல் கட்சியினரைப் போல இல்லாமல் ரவுடித்தனமாக செயல்பட்ட கண்ணன் கட்சியினரின் செயலால் புதுவை மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
நிலைமை மோசமாகி விடாமல் தடுப்பதற்காக புதுவை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications