எம்.ஜி.எம் தீம் பார்க்கில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணம்

சென்னை சூளையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தி.நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இவர் தனது நண்பர்களோடு எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்டுக்கு சென்றார். அங்கு பல்வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபட்ட சுரேஷ்குமாரும், அவரது நண்பர்களும், நீச்சல்குளத்தில் நீச்சலடிக்க இறங்கினர்.
நீச்சலடிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுரேஷ்குமார் தத்தளிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சுரேஷ்குமார் உயிரிழந்து விட்டார்.
எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே தனது மகன் பலியாகியுள்ளதாக சுரேஷ்குமாரின் தந்தை திணேஷ்குமார் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் நல்ல உயரம். அந்த நீச்சல்குளத்தில் 4 அடி அளவுக்கே தண்ணீர் இருந்துள்ளது. எனவே நீரில் மூச்சுத் திணறியதாக கூறுவதை நம்ப முடியாது.
மூச்சுத் திணறி எனது மகன் இறந்திருக்க முடியாது. வேறு ஏதோ நடந்திருக்கிறது.
நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. நீச்சல்குளத்தில் எனது மகன் போராடியபோது அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப எம்.ஜி.எம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.
கடந்த ஆண்டு எம்.ஜி.எம். பெரும் சர்ச்சையில் சிக்கியது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ராட்சத ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து அவர் படுகாயமுற்றார். இன்னும் கூட அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம்மில் வேலை பார்த்து வந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது சுரேஷ்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் பரிதாபமாக இறந்துள்ளார்.
சுரேஷ்குமார் மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications