மாறு வேடத்தில் டிஐஜி ரெய்ட்-லாட்டரி விற்ற 39 பேர் கைது
கரூர்: தமிழக அரசால் தடை செய்ப்பட்ட லாட்டரி சீட்டுகளை கரூரில் விற்பனை செய்த 39 பேரை திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் மாறு வேடத்தில் சென்று கைது செய்தார்.
கரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் போலீஸ் ஆதரவுடன் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை அமோகமாக நடை பெற்று வந்தது. குறிப்பாக கரூர் காவல் நிலையம் அருகிலேயே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வந்தது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினர். இந்நிலையில் நேற்றிரவு மாறு வேடத்தில் டிஐஜி அசோக்குமார் தாஸ் கரூர் வந்தார். லாட்டரி விற்பனை நடக்கும் இடங்களுக்கு தனியாக சென்று, லாட்டரி சீட்டு கேட்டார்.
கடைக்காரர்கள் லாட்டரி சீட்டு கொடுத்தபோது அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். அவர்களிடம் இருந்த செல்போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்தார்.
அடுத்தடுத்து 5 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்த 39 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.2.40 லட்சமும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள், லேப் டாப், கம்யூட்டர், 24 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்து. லோக்கல் போலீசாருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. டிஐஜியின் இந்த அதிரடி ரெய்டு மாவட்ட காவல் துறையை கதிகலங்கச் செய்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications