எஸ்எஸ்எல்சி தேர்வு: ஊனமுற்ற மாணவருக்கு அனுமதி மறுப்பு
நெல்லை: இரண்டு கைகளும் ஊனமுற்ற மாணவருக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மற்றொருவரை வைத்து எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நெல்லை அருகேயுள்ள மானுர் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சொக்கலி்ங்கம். இவரது ஐந்தாவது மகன் மணிகண்டன். பிறவியிலேயே கை, கால் விரல்கள் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. இத்துடன் பார்வை கோளாறும் உள்ளது.
மணிகண்டன் தற்போது மேலஇலந்தகுளத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கை விரல்கள் வளர்ச்சியடையாத நிலையில் இவரால் வேகமாக எழுத முடியாது.
நேற்று நடந்த பொதுத் தேர்வின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் விடைகளை எழுதமுடியாமல் மணிகண்டன் மிகவும் கஷ்டப்பட்டார்.
குடும்ப வறுமையிலும் இரண்டு கைகளும் ஊனமுற்ற தனது நிலையை கருதி கூடுதல் தேர்வு நேரம் வழங்கவேண்டும். அல்லது, பார்வையற்ற மாணவர்கள் சொல்லச்சொல்ல வேறொருவர் எழுதுவது போன்ற சலுகையையாவது தரவேண்டும் என்று மணிகண்டன் கோரினார். ஆனால் பள்ளிநிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால், "நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் நேரம் கிடைக்காததால் 7 மற்றும் 5 மதிப்பெண்கள் கொண்ட வினாவிற்கு விடையளிக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் மற்ற தேர்வுகளையும் சரியாக எழுத முடியாத நிலை ஏற்படும்" என்று மணிகண்டன் கவலை தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications