22 ரயில் நிலையங்களில் 'ஷாப்பிங் மால்கள்'!!
புதுக்கோட்டை: சென்னை உட்பட நாட்டின் 22 முக்கிய ரயில் நிலையங்களில் பிரமாண்டமான ஷாப்பிங் மால்கள் அமைக்கப்படும் என ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு கூறினார்.
புதுக்கோட்டை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்துக்குள் தற்போது 90 கி.மீ தூரத்துக்கான மீட்டர்கேஜ் பாதைகள் மட்டுமே, அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டியுள்ளது. இதுவும் 2010க்குள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவிடும்.
திருச்சியிலிருந்து மானாமதுரை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணியை இரண்டாவது முறையாக ஆய்வு செய்தேன். அகல ரயில் பாதை பணி, காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரை முடியும் நிலையில் உள்ளது. பணியில் ஏற்பட்ட தாமதத்துக்கு மழை, மேம்பாலம் அமைத்தல், ரயில்வே டிராக்குகளை வெல்டிங் செய்வதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவையே காரணம்.
இந்தப் பணிகளை ஏப்ரலுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதைத் தொடர்ந்து மே மாத இறுதிக்குள் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படும்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. கடந்தாண்டு தமிழக ரயில் நிலையங்களை நவீனப்படுத்த, ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளாக பயணிகள் ரயில் கட்டணம் உயத்தப்படாததால், ரூ. 5,000 கோடி ரூபாய் வரை, ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை சரக்கு கட்டணத்தின் மூலம் சரி செய்யப்படுகிறது.
சென்னை-திருச்சி இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடக்கிறது. அதில், விழுப்புரம் வரை பணி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் விழுப்புரம்-திருச்சி இடையிலான பாதையும் மின்மயமாக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications