நடுரோட்டில் ஏட்டை தாக்கி ரகளை- வக்கீல் கைது
தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஏட்டை தாக்கி நடுரோட்டில் ரகளை செய்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 7வது தெருவை சேர்ந்த ரத்தினம் மகன் கண்ணன். சட்டக்கல்லூரியி்ல் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், அதனை பார் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை. வட்டித் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் கண்ணன் தனது வீ்ட்டிலிருந்து பைக்கில் பழைய பஸ் நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். விவிடி சந்திப்பு சிக்னல் அருகே சிக்னலை மீறி செல்ல முயன்றபோது நடுரோட்டில் அவரது பைக் எஞ்சின் ஆஃப் ஆகிவிட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கு போக்குவரத்தை ஓழுங்குபடுத்திக் கொண்டிருந்த டிராபிக் ஏட்டு சாந்தானம் கண்ணனை பார்த்து சத்தம் போட்டார். இதனால் கண்ணனுக்கும், ஏட்டு சந்தானத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென்று கண்ணன் ஏட்டுவின் கையை பிடித்து முறுக்கினார். நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து அவர்களை விலக்கி விட்டு சத்தம் போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அவரிடமும் தகராறு செய்தார்.
இதையடுத்து ஏட்டு சந்தானம் கொடுத்த புகாரின் பேரில் கண்ணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications