முட்டுக்காடு சாலை விபத்தில் கவுன்சிலர் உள்பட 5 பேர் பலி
சென்னை: சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்த சாலை விபத்தில் சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் பலியானார்கள்.
சென்னை ராயபுரம் பகுதி திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் (43). இவர் சென்னை மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவர் நேற்று தனது நண்பர்கள் முருகன், இளவழகன், செந்தில் ஆகியோருடன் மாமல்லபுரத்திற்கு சென்றார். காரை மகேஷ் என்பவர் ஓட்டினார்.
மாமல்லபுரத்தில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது முட்டுக்காடு அருகே கார் வந்தபோது, திடீரென நிலை தடுமாறி ஓடியது. பின்னர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துடன் மோதியது.
மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. கவுன்சிலர் ஸ்ரீதர் தூக்கி வீசப்பட்டு பலியானார். அவர் தவிர இளவழகன், செந்தில், மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். முருகன் படுகாயமடைந்த நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications