'ஓகேனக்கல்'-பிரதமருடன் பாலு சந்திப்பு

முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி அமைச்சர் டி.ஆர்.பாலு பிரதமரை சந்தித்தார். பின்னர் வெளியில் வந்த டி.ஆர்.பாலு கூறுகையில், 1998ம் ஆண்டு தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி காவிரியிலிருந்து பெங்களூர் குடிநீர்த் தேவைக்கும், தமிழக குடிநீர்த் தேவைக்கும் நீர் எடுத்துக் கொள்வது என்று உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பெங்களூர் குடிநீர்த் தேவைக்காக காவிரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
ஆனால் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது கர்நாடகம். இதுகுறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.
தேர்தல் ஆதாயத்திற்காக தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையை கர்நாடகத்தினர் எழுப்புகின்றனர் என்றார்.
முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பிரதமரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத் தரப்பு நியாயத்தை பிரதமரிடம் விளக்கினேன். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இன்னும் ஒரிரு மாதங்களில் கர்நாடகத்தில் புதிய அரசு அமையவுள்ளது.
அதன் பின்னர் தமிழக அரசும், கர்நாடக அரசும் இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.
அதுவரை தமிழக அரசும், தமிழக மக்களும் பொறுமையோடு இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்காமல் சமாதானமாகப் பேசவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அவர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications