காவிரி பாதுகாப்புக்கு ரூ 300 கோடி!
ஈரோடு: தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றின் பாதுகாப்புக்காக ரூ. 300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகள் மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.
அதன் பலனாகக்தான் நதியோர கரைகளில் உள்ள நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி நதி ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கொடுமுடி, வாங்கல், மாயனூர், திருச்சி, தஞ்சை வழியாக பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
ஈரோடு வழியாக வரும் காவிரி நீரில் அதிக அளவு நீர் மாசு ஏற்படுவதாக சுற்றுச்சசூழல் அமைப்பினர் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு முதல் திருச்சி வரை காவிரி நதியை பாதுகாக்க ரூ 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவும், வாய்க்கால் மூலம் கழிவு நீரை வேறு பாதைக்கு திருப்பி விடவும், மக்கள் காவிரி ஆற்றில் குளிக்க ஏற்ற வகையில் ஆற்றுப்படுகையை மேம்படுத்தவும், மண் அரிப்பை கட்டுப்படுத்த மரம் வளர்க்கவும் இந்த நிதி பயன் படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் ஒடும் 34 நதிகளை பாதுகாக்க ரூ 4 ஆயிரத்து 783 கோடி மத்திய அரசு அனுமதித்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் காவிரி, தாமிரபரணி, வைகை, அடையாறு, கூவம் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications