கர்நாடகத்திற்கு எதிராக ஓசூர் கன்னடர்கள்!

தமிழகத்திலேயே கன்னட இனத்தவர் அதிக அளவில் வசிப்பது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில்தான். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35 சதவீத கன்னடியர்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பல பள்ளிகளில் கன்னடம் 2வது மொழிப் பாடமாகவும் உள்ளது.
இந்த நிலையில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து கர்நாடகவில் நடந்து வரும் போராட்டங்கள் இங்குள்ள கன்னடர்களை எரிச்சல்படுத்தியுள்ளது.
இந்தக் குடிநீர்த் திட்டத்தால் இரு மாவட்டங்களிலும் உள்ள கன்னட மக்களும்தான் பயன்பெறப் போகிறார்கள். பிறகு எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்று அவர்கள் கோபமாக கேட்கிறார்கள்.
இதுகுறித்து ஓசூர் நகராட்சி கவுன்சிலராக உள்ள கன்னடரான வேணுகோபால் கூறுகையில், இரு மாவட்டங்களிலும் கன்னட மக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். அப்படி இருக்கையில் எதற்காக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.
இன்னொரு கன்னட கவுன்சிலரான குமார் கூறுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் இங்குள்ள கன்னடர்களுக்குத்தான் பெரும் பலன் கிடைக்கும். எனவே இந்தத் திட்டத்தை எதிர்ப்பது முட்டாள்தனமானது என்றார்.
கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து ஓசூரில் உள்ள கன்னடர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் இங்குள்ள கன்னடர்கள் முடிவு செய்துள்ளனராம்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications