சேலம்-மைசூர் பஸ்கள் நிறுத்தம்

ஓகேனக்கலை உரிமை கொண்டாடியும், ஓகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்தும் கர்நாடகத்தில் சில கன்னட அமைப்புகள் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கியுள்ளனர். இதனால் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிளில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
கன்னட அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக தமிழகத்திலும் கர்நாடக அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. மதுரையில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக புக்கிங் அலுவலகத்தைப் பூட்டி ஊழியரை சிறைப் பிடித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் கன்னட அமைப்பினர் தமிழர்கள் மீதும், தமிழக அரசுப் பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து சேலத்திலிருந்து மைசூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. மாலே மாதேஸ்வரன் மலை வரை மட்டுமே அவை இயக்கப்படுகின்றன.
எனவே இன்று காலை முதல் சேலத்தில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. அந்த பஸ்கள் மாதேஸ்வரன் மலை வரை சென்று திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் பஸ்கள் வழக்கம் போல செல்கின்றன. இருப்பினும் இவற்றை இரவு நேரத்தில் இயக்காமல் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
எடியூரப்பா கொடும்பாவி எரிப்பு:
இந்த நிலையில், தமிழக மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சேலத்தில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications