ராஜ்குமார்-வீரப்பன்: 'தூது வந்தவர்கள் மறந்தது ஏன்?'-நெடுமாறன்
சென்னை: நடிகர் ராஜ்குமாரை மீட்க என்னிடம் தூது வந்த கன்னட எழுத்தாளர்களும், திரைப்படத் துறையினரும் கன்னட வெறியர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க கூட முன் வராததை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னட வெறியர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. கர்நாடக தமிழர்களின் கலை-பண்பாடு மையமாக திகழும் பெங்களூர் தமிழ் சங்கம் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு சொந்தமான ஒகேனக்கல் மீது அத்துமீறி உரிமை கொண்டாட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். கர்நாடகத்தில் உள்ள சகல கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளனர். காவிரி பிரச்சினை, வள்ளுவர் சிலை திறப்பு பிரச்சினை போன்றவற்றில் அடாவடித்தனமாக கன்னட வெறியர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
கன்னட நடிகரான ராஜ்குமார் வீரப்பனால் சிறைப்பிடிக்கப்பட்ட போது கன்னட எழுத்தாளர்கள்- திரைப்படத்துறையை சேர்ந்த முக்கிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்பட பலர் சென்னைக்கு திரண்டு வந்து என்னை சந்தித்து ராஜ்குமாரை மீட்டுத்தருமாறு வேண்டிக் கொண்டனர்.
நானும், நண்பர்களும் வீரப்பனை சந்தித்து பேசி ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வந்தோம். இதன் விளைவாக கன்னடர்-தமிழர் உறவு ஓங்கி வளரும் என நம்பினோம். ஆனால் அதற்கு நேர்மாறாக கன்னட வெறியர்கள் தொடர்ந்து தமிழர்களை தாக்கி வருகிறார்கள். என்னிடம் தூதுவந்த கன்னட எழுத்தாளர்களும், திரைப்படத் துறையினரும் கன்னட வெறியர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க கூட முன்வராததை வன்மையாக கண்டிக்கிறேன்.
கர்நாடக அரசின் உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் அத்துமீறும் கன்னட வெறியர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள். எனவே, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய போலீஸ் படையை அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்த வேண்டிய கடமை தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உண்டு. அதை அவர் செய்வார் என நம்புகிறேன்.
பெங்களூர் தமிழ் சங்கமும், தமிழர்களும் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தப்படும். கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், அனைத்து தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications