கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக் கொலை
நாகர்கோவில்: இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். புதரில் வீசியெறியப்பட்ட அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையோர புதரில் ஒரு இளம்பெண் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அவர்,குமரி மாவட்டம் அனந்தனார்குடியைச் சேர்ந்த நந்தினி (18) என்று தெரிந்தது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருடைய தந்தை முருகன் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தாய் வசந்தி, தம்பி ஜான் பினோ (14) தங்கை சோனியாவுடன் (12) நந்தினி இருந்துள்ளார்.
கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்தார். கடந்த 30-ந் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்ட நந்தினி, ரயிலில் வந்து கொண்டிருப்பதாக தாய் வசந்தியிடம் போனில் கூறியுள்ளார்.
நெல்லைக்கு வந்துவிட்டதாகவும் இரவு வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் மீண்டும் போனில் கூறியிருக்கிறார். பின்னர் மீண்டும் பேசிய அவர் காலையில்தான் வீட்டுக்கு வர முடியும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின்போது நந்தினியின் கையில் ஆணின் தலைமுடியை டாக்டர்கள் கண்டெடுத்தனர். எனவே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காதல் பிரச்னையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நந்தினியின் செல்போன் கிடைக்கவில்லை.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications