தமிழகத்தில் போராட்டம் வலுக்கிறது
சென்னை: தமிழகம் முழுவதும் கர்நாடகத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதுவரை நடந்திராத அளவுக்கு கோபாவேசத்துடன் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள், வக்கீல்கள், சட்ட மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
சேலம், குகை நரசிங்கபுரத்தில் கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடக பட்டு விற்பனை வாரியம் உள்ளது. இங்கு பெரியார் திராவிட கழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாக வந்தனர்.
பட்டு விற்பனை வாரியத்தின் ஜன்னல் கதவுகளை அடித்து உடைத்தனர். போர்டும் அடித்து நொறுக்கப்பட்டது. பெங்களூர், எங்களூர் என்று கோஷமிட்டபடியும், ஓகனேக்கலை உரிமை கொண்டாடாதே என்று கோஷமிட்டும் போராட்டம் நடத்தினர்.
இதேபோல சேலத்தில் மனித உரிமை இயக்கத்தினர் முன்னாள் முதலவர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோரின் கொடும்பாவிகளை தீயிட்டுக் கொளுத்தினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கு மைசூரிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் மைசூர் பஸ் வந்தது. அதை சிறை பிடித்து, அதில் இருந்த கன்னட எழுத்துக்களில் தார் பூசி அழித்தனர். பின்னர் தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, திருமா வாழ்க என்று எழுதினர்.
பின்னர் பஸ்சை நகர விடாமல் தொடர்ந்து கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். அதன் பின்னர் பஸ் புறப்பட்டுச் சென்றது.
நெல்லையில் எடியூரப்பா கொடும்பாவி எரி்ப்பு:
நெல்லையில் எடியூரப்பா கொடும்பாவியை எரித்த திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் அருகே கூடிய திமுகவினர் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக முதலில் பிரச்சனையை ஆரம்பித்து வைத்த கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தனர்.
இது தொடர்பாக 20 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications