தமிழக டிரைவர்களுக்கு அடி-உதை: பஸ்கள் நிறுத்தம்

கர்நாடகத்தில் கன்னட அமைப்பினரின் வன்முறை இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து தமிழக பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று காலை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு மூன்று தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சென்றன. இந்தப் பேருந்துகள் சந்தாபுரா என்ற இடத்தில் சென்றபோது கன்னட அமைப்பினர் பேருந்துகளை மறித்து நிறுத்தினர்.
பின்னர் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பிறகு மூன்று பேருந்துகளின் டிரைவர்களையும் கீழே இறக்கி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
சம்பவம் அறிந்து போலீஸார் விரைந்து வந்து கூட்டத்தினரை கலைந்து போகச் செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இந்தத் தகவல் ஓசூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சென்றது. இதையடுத்து தமிழகத்திலிருந்து பெங்களூர் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன.
இருப்பினும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி இயக்கப்பட்டு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications