7 தேமுதிக மா.செக்கள் மாற்றம்: விஜய்காந்த் அதிரடி
சென்னை: தமிழகம் முழுவதும் கட்சியின் 7 மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தேமுதிக கோவை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் எம்.பொன்னுசாமி, கோவை மாநகர மாவட்ட கழகச் செயலாளர் ர.தமிழ் முருகன், கோவை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.ராஜசேகர்,
வேலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.டி.பிரபாகரன், தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கோ.சங்கர், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.தாமேதர கண்ணன் ஆகியோர் அவரவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அதே போல திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து எஸ்.ரவிக்குமார் விடுவிக்கப்படுகிறார்.
கோவை வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக, மாநில விவசாய அணிச் செயலாளர் ஆர்.பாண்டியனும் கோவை மாநகர மாவட்ட கழக பொறுப்பாளராக டென்னிஸ் கே.பிள்ளையும், கோவை தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கீர்த்தி சுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல வேலூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக இளங்கோவனும், விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளராக எஸ்.ஆஸ்டினும்ன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக ரவீந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் தேமுதிக மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications