ஓகனேக்கல் திட்டம் நிறுத்திவைப்பு - ஜெ. எதிர்ப்பு
சென்னை: மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்குதலைத் தொடர்ந்தே ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில், கர்நாடகத்தினுடைய தயவோ, அனுமதியோ தமிழகத்திற்குத் தேவையில்லை. ஓகனேக்கல் தமிழ்நாட்டிற்குள்தான் இருக்கிறது. நமக்கு வருகிற காவிரி நீரைத்தான் நாம் பயன்படுத்தப் போகிறோம்.
பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளும்போது நாம் ஏன் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. எனவே இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. இதில் தலையிடுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.
இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காத்திடும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதால், அந்தப் பொறுப்பை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்து தமிழக மக்களின் உரிமையை காத்திட முன்வர வேண்டும் என்று மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்துகிறது என்று முதல்வர் கருணாநிதியால் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இப்போது கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் பதவியேற்கும் புதிய அரசுடன் கலந்து பேசி, தேவைபப்ட்டால் களம் காண்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சட்ட பேரவையில், முதலில் தெரிவிக்காமல், ஒரு சாதாரண புதிய அறிவிப்பைக் கூட மாநில அரசு வெளியிடக் கூடாது என்பதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் மரபு. இந்த நிலையில், சட்டசபையில் கலந்து ஆலோசிக்காமல் திட்டம் நிறுத்த வைக்கப்படுகிறது என்று அறிவிக்கும் செயலே சட்டவிரோதமானது.
கர்நாடக மாநில தேர்தலுக்கும், தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம். அவர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய பேச்சல்ல. பேச்சளவில் கூட ஓகனேக்கல்லில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.
புதிய கர்நாடக அரசு பதவியேற்றதும் தமிழகத்திற்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன் என்று சொன்னதற்கு என்ன அர்த்தம். அப்படியானால் ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றலாமா, இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்குத்தான் உள்ளது என்று ஒப்புக் கொள்கிறாரா. கர்நாடகத்திற்கு இல்லாத அதிகாரத்தை வழங்குகிறாரா.
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியார் அனைத்து அனைத்து நதி நீர்ப் பிரச்சினையிலும் அண்டை மாநிலங்களுக்கு சாதகமாகவே கருணாநிதி நடந்து கொள்கிறார். இதன் மூலம் தமிழக மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துள்ளார். மத்திய அரசிடமிருந்து வந்துள்ள நெருக்கடி காரணமாகவே இப்போது இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications