நடிகர் கார்த்திக்குக்கு சிக்கல்-நடவடிக்கை வருமா?!
சென்னை: கன்னட அமைப்பினரைக் கண்டித்து சென்னையில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர் கார்த்திக்கை நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என பார்வர்ட் பிளாக் கட்சியின் தினகரன் பிரிவு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச்செயலர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அப்பாவி தமிழர்களையும், சொத்துக்களையும் தாக்கி வரும் கன்னட வெறியர்களை கண்டித்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தங்கள் முக்கிய பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட சூழ்நிலையில், சென்னையில் இருந்து கொண்டே நடிகர் கார்த்திக் புறக்கணித்துள்ளது ஜீரணிக்க முடியாதது.
ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து கொண்டு, பொது பிரச்னைக்காக நடக்கும் முக்கிய போராட்டங்களை புறக் கணிப்பது நடிகர் கார்த்திக்கிற்கு வாடிக்கையாகி விட்டது. ஆகவே, அவரை கண்டிக்கும் விதத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து அவரை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமாருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
பார்வர்ட் பிளாக் தலைவர் மூக்கையாதேவர் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்காக ஏப்., 3ம் தேதி மதுரை வந்து விட்டு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் அவர் புறக்கணித்தார். சென்னை உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளவில்லை.
அரசியல் கட்சி தலைவராக இருந்து கொண்டு பொது பிரச்னைகளுக்காக நடக்கும் முக்கிய போராட்டங்களை கார்த்திக் புறக்கணிப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே நடிகர் சங்கத்திலிருந்து அவரை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்கம் கார்த்திக் மீது நடவடிக்ைக எடுக்குமா என்பது குறித்துத் தெரியவில்லை.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications