பணியை தொடங்காத காண்ட்ராக்டர்களுக்கு அபராதம்: கலெக்டர் அதிரடி
மதுரை: சாலைப் பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர்.
மதுரை மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் (2006-2007) கீழ் 29 சாலைப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இப்பணிக்கான உத்தரவு மற்றும் திட்ட அறிக்கையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு உடனே வழங்கப்பட்டது.
திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், சில சாலைப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரகள் அலட்சியமாக இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் ஜவஹருக்கு புகார் வந்தது.
இதையடுத்து நடந்த விசாரணையில் மேலூர்-சிவகங்கை சாலை, தேவன் பெருமாள் பட்டி சாலை, சிலம்பக்கோன் பட்டி-குமாரபட்டி சாலை, பெருங்காமநல்லூர்-அல்லி நகரம் சாலை உள்ளிட்ட 12 சாலைப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர்களுக்கு, பணிக்கு ரூ.1000 வீதம், 12 பணிக்கு ரூ.12,000 அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் ஜவஹர் உத்தரவிட்டார். இதனால் ஒப்பந்ததாரர்கள் கலங்கிப்போய் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications