வெளி மாநில டாக்சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு-கன்னட ரக்ஷன வேதிகே வன்முறை
பெங்களூர்: பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த டாக்சி சேவைத் தொடக்க விழாவில் புகுந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தை தாக்கி சூறையாடினர்.
வி-லிங்க் என்ற டாக்சி நிறுவனம் பெங்களூரில் மேரு ரேடியோ டாக்சி சர்வீஸஸ் என்ற பெயரில் முன்பே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வகையிலான டாக்சி சேவையை தொடங்கியது.
இதுதொடர்பான தொடக்க விழாவுக்கு நேற்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு 20க்கும் மேற்பட்ட கன்ன ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர்.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் டாக்சிகளை நிறுத்த அனுமதி கொடுக்காமல், வெளி மாநிலத்தைச் சேர்ந்த டாக்சி நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது என்று கூறி தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த இடமே சூறையாடப்பட்டது. விழா மேடை முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது.
வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு இடம் இல்லை. அவர்கள் டாக்சி சேவையை இங்கு நடத்த முடியாது. இதனால் உள்ளூர் டாக்சி டிரைவர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.
வி-லிங்க் டாக்சி நிறுவனம் தனது மேரு நிறுவனத்தின் மூலம் பெங்களூர் நகரில் 500 லோகன் ஏசி டாக்சிகளை இயக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications