ஸ்பிரைட் என நினைத்து ஆசிட்டைக் குடித்த சிறுமி பரிதாப சாவு
சேலம்: தர்மபுரி அருகே ஸ்பிரைட் பாட்டிலில் இருந்த ஆசிட்டை, ஸ்பிரைட் என நினைத்துக் குடித்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூரைச் சேர்ந்த சண்முகம், வெண்ணிலா தம்பதியினரின் மகள் சன்மதி (3).
சண்முகத்திற்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த மோதல் முற்றியது. இதையடுத்து சண்முகம் தனது மனைவி, மகளுடன் மொரப்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.
காவல் நிலையத்தில் அவர்களை போலீஸார் நீண்ட நேரம் காத்திருக்கக் கூறினர். இதனால் சண்முகம் தனது குடும்பத்தோடு காவல் நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருந்தார்.
இந்த நிலையில் குழந்தை சன்மதி, அங்குள்ள வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த ஸ்பிரைட் பாட்டிலைப் பார்த்த சன்மதி, அது ஸ்பிரைட் என நினைத்து வேகமாக குடித்துவிட்டாள். ஆனால் அதில் இருந்தது, கரைகளை அகற்ற உதவும் ஆசிட் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
பின்னர் சன்மதியுடன் பெற்றோர் வீடு திரும்பினர். வீடு திரும்பியதும் சன்மதி மயக்கமடைந்தாள். பதறிப் போன பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சன்மதி உயிரிழந்தாள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications