சரித்திரம் படைத்த உச்ச நீதிமன்றம்-அர்ஜூன் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்தன் மூலம் உச்ச நீதிமன்றம் சரித்திரம் படைத்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் புதிய சரித்திரம் படைத்துள்ளது. இந்திய சரித்திரத்தில் இது அதி முக்கியம் வாய்ந்த தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்புக்கு மத்திய அரசு மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவிக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சட்டம் நிறைவேறவும், இதற்காக போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்த பல்வேறு அரசியல் கட்சியினருக்கும், பிற அமைப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பாஜக வரவேற்பு:

இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பினை பாஜகவும் வரவேற்றுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில்,

இந்த இட ஒதுக்கீடு தேவையானதுதான். நலிவடைந்த பிரிவினருக்குக் கிடைத்துள்ள வெற்றி இது. அதேசமயம், இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் செய்த சில குழப்பங்களால்தான் பெரும் பிரச்சினையும், சர்ச்சையும் ஏற்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களின் கவலைகள் குறித்து அர்ஜூன் சிங் சற்று கவனம் செலுத்தியிருந்தால், கவலைப்பட்டிருந்தால், குறைகளை நிவர்த்தி செய்ய முயன்றிருந்தால் இந்த அளவுககு பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பில் பாஜக கலந்து கொண்டு ஆதரவாக வாக்களித்தது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார்.

இடதுசாரிகள் மகிழ்ச்சி:

இடதுசாரித் தலைவர்களும் தீர்ப்பினை வரவேற்றுள்ளனர். அதேசமயம் கிரீமி லேயர் என்ற கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம் நீக்கியிருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+