ஓகேனக்கல்-தர்மபுரியில் விஜய்காந்த் இன்று ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற கோரியும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் தர்மபுரியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள விஜயகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து கார் மூலம் தர்மபுரி புறப்பட்டார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.
இதில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேமுதிக தொண்டர்கள் கார்கள், வேன்கள், லாரிகளில் தர்மபுரியில் வந்து குவிந்துள்ளனர்.
இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவர்னரிடம் சரத்குமார் மனு:
இதற்கிடையே சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்து ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக ஒரு மனு அளித்தார்.
அவருடன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
அந்த மனுவில், கர்நாடகாவில் தேர்தலுக்கு பிறகு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இத்திட்டத்தை எதிர்க்கத் தான் செய்யும். இத் திட்டத்தை நிறைவேற்ற நாம் கர்நாடக அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.
நீங்கள் உடனே தலையிட்டு இதில் உரிய தீர்வு காண வேண்டும். தமிழகத்திற்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஓகேனக்கல் திட்டத்தை உடனே நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications