இரும்பு ஏற்றுமதிக்கு தடை-புதிய சலுகைகள் அறிவிப்பு
டெல்லி: பணவீக்க உயர்வு, பங்குச் சந்தை சரிவை கட்டுப்படுத்துவதற்காக இரும்பு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதே நேர பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் வெளிநாட்டு ஏற்றுமதி கொள்கையின் துணைநிலை அறிக்கையை வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத் அறிவித்தார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் அன்னிய வர்த்தக கொள்கை துணை நிலை அறிக்கையை அமைச்சர் கமல்நாத் அறிவித்தார்.
அதில், இந்த ஆண்டு ஏற்றுமதி இலக்கான 155 பில்லியன் டாலர் அளவை எட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதன் மூலம் 200 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வருமானவரி சட்ட விதி 10-பியின் படி 100 சதவீதம் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
ஏற்றுமதியாளர்கள் கூடுதலாக செலுத்திய கலால் மற்றும் மத்திய விற்பனை வரியை குறித்த காலத்துக்குள் திரும்பத் தராத பட்சத்தில் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து அந்த தொகை வழங்கப்படும்.
முறைசாரா தொழிலாளர்களால் பெருமளவில் தயாரிக்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொம்மைகள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட கலால் வரி விலக்குடன் கூடுதலாக 5 சதவீத வரிச்சலுகை வழங்கப்படும்.
பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர் ஏற்றுமதியில் போக்குவரத்து கட்டணச் சுமையை ஈடுகட்டுவதற்காக 2.5 சதவீத வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவந்த வட்டிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து பார்சல் சேவை மூலம ரூ. 2 கோடி ஆபரணங்களைக் கொண்டு வரலாம் என்ற உச்சவரம்பு ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்றுமதி பொருளாதார மண்டலங்களில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் உபரி, வீணான, கழிவுப் பொருட்களை தகுந்த சுங்க வரியை செலுத்திவிட்டு வெளிமார்க்கெட்டில் விற்றுக் கொள்ளலாம்.
பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தும் வகையில் கேபிடல் குட்ஸ் ஏற்றுமதி நிறுவனங்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications