கர்நாடக தேர்தல்-பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழர்கள் ஒட்டு மொத்த புறக்கணிப்பு

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகரில் மார்வாடி ஒருவரை அந்தக் கட்சி நிறுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 3 கட்டங்களாக நடக்கிறது. ஓட்டு வேட்டைக்காக ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் ஒகேனக்கல் சென்று பிரச்னை கிளப்பினர். இது இரு மாநிலங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தியது.
இந் நிலையில் பாஜ வேட்பாளர் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பெங்களூரில் சிவாஜி நகர், சாந்தி நகர் உள்ளிட்ட தொகுதிகள், கோலார் தங்கவயல், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் ஆகிய தொகுதிகளில் சிலவற்றிலாவது கட்சிகள் தமிழர்களை நிறுத்துவது வழக்கம்.
பெங்களூரில் மாற்றியமைக்கப்பட்டுள்ள தொகுதி நிலவரப்படி குறைந்தது 3 தொகுதிகளிலாவது தமிழர்கள் வெற்றி பெற முடியும். இந்தத் தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெறும் நிலை இருந்தும் ஒரு இடத்தில் கூட தமிழர்களை நிறுத்தாமல் பாஜக புறக்கணித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தெலுங்கு பேசுவோரையும் மார்வாடிகளையும் அந்தக் கட்சி நிறுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது பாஜகவி்ல் உள்ள தமிழர்களையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications